அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

அல்லாஹ்வின் பேரருளால் எமது ஜாமி தீனிய்யாவிலே சென்ற செப்டம்பர் மாதம் 26 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவர்களிடையே மாபெரும் அல்குர்ஆன் மனனப்போட்டி நடைபெற்றது. அல் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு இடையிலே போட்டி உணர்வை ஏற்படுத்தி இன்னும் இன்னும் தான் மனனம் செய்த இந்த அல்குர்ஆனை முறைப்பட உறுதியாக பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வேண்டி அவர்களுக்கு இடையிலே இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் செப்டம்பர் 26ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற்றது. 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற இந்த போட்டி முழு குர்ஆனை மனனம் செய்த பிரிவு
- 20 ஜூஸ் பிரிவு
- 10 ஜுஸ் பிரிவு
- 05 ஜூஸ் பிரிவு
- 03 ஜூஸ்கள் பிரிவு
தேர்வு செய்யப்பட்ட சூராக்கள் மனனம் செய்த பிரிவு
என்று இந்த போட்டி நடைபெற்றது. இதில் அல்ஹம்துலில்லாஹ் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு திறம்பட ஒவ்வொருவரும் தங்களது அந்த போட்டியிலே பூர்த்தியா திறமைகளை வெளிக் காட்டி இருந்தனர். அந்த அடிப்படையில் போட்டிகளிலே முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மொத்தம் 17 மாணவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் எதிர் வருகின்ற மாதம் நடைபெறுகின்ற மதரஸாவுடைய அறுபதாவது வருட பூர்த்தியை நினைவு கூறும் முகமாக நடைபெற இருக்கும் நிகழ்வில் அவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வருடா வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் இந்த குர்ஆன் மனன போட்டி நடைபெறும் என மதரஸாவின் ஆசிரியர்களினால் முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது.
30.10.2023